பிந்திய செய்திகள்

யூடியூப் வீடியோக்களில் புதிய அம்சம்!

உலகம் முழுவதும் பெரிதும் பார்க்கப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக யூடியூப் இருக்கிறது.

தினம் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க யூடியூப் புதிய அம்சம் ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பது போல ரியாக்‌ஷன்ஸ் அம்சம் யூடியூப்பில் வெளியாகவுள்ளது.

தற்போது வாட்ஸ்ஆப்பில் சோதனையில் இருக்கும் ரியாக்‌ஷன்ஸ் யூடியூப்பிலும் சோதனை நிலையில் இருக்கிறது.

இதுவரை பேஸ்புக்கில் லைக், டிஸ்லைக், கமெண்ட் என்ற மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே பயனர்கள் வீடியோ குறித்து கருத்து பரிமாறும் வண்ணம் இருந்தது.

Love Is Most Popular Facebook Reaction Emoji for Past Year

இதில் சமீபத்தில் டிஸ்லைக் அம்சம் நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது யூடியூப் ரியாக்‌ஷன் அம்சத்தை கொண்டுவரவுள்ளது.

இதன்மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோக்களுக்கு எமோஜ்ஜிகள் மூலம் ரியாக்ட் செய்ய முடியும்.

குறிப்பாக வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே தங்களுக்கு பிடித்த இடங்களில் ரியாக்ட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியோப் 8 ரியாக்‌ஷன் கொண்ட எமோஜிக்களை தற்போது வழங்கவுள்ளது. விரைவில் கூடுதல் எமோஜ்ஜிக்களும் இதில் சேர்க்கப்படவுள்ளன.

தற்போது சோதனைக்காக ஒருசில வீடியோக்களில் மட்டுமே நாம் எமோஜ்ஜிக்களை பயன்படுத்த முடியும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts