பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (30-03-2022)

மேஷ ராசி

நேயர்களே, உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். நிதி நிலைமை சீரடையும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். மன தைரியம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போகவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். விசேஷங்களை முன்னின்று நடத்த முடியும். வாகன யோகம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடக ராசி

நேயர்களே, தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். யாரிடமும் விவாதிக்க வேண்டாம். செலவுகளை குறைத்து சேமிக்க பார்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

சிம்ம ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்து பகைமை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி

நேயர்களே, உங்கள் பலம், பலவீனத்தை நன்கு உணர முடியும். புதிய முயற்சிகள் தள்ளி போகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும்.பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது நபர்கள் வருகை தருவர். உறவினர்கள் சிலரால் மன்சங்கடம் வரும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோக இடையூறுகள் நீங்கும்.

மீன ராசி

நேயர்களே, நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். திட்டமிட்ட காரியங்களை தாமதமின்றி முடிக்க முடியும். கடன் பிரச்சனை குறையும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts