பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(31-03-2022)

மேஷ ராசி

அன்பர்களே, நம்பிக்கையானவர்களின் நட்பு நன்மையை தரும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். பெற்றோர்கள் ஒத்தாசையாக இருப்பர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தின் மீது உள்ள அக்கறை அதிகரிக்கும். எதிலும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். வீடு மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற முடியும். அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். இஷ்டதெய்வ வழிபடு சிறப்பாக அமையும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்சனையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் செலவுகளை குறைக்கவும். பழைய வீட்டை சீரமைப்பதில் கவனம் தேவை. நட்பு வழியில் சில நெருக்கடிகள் வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம் ராசி

அன்பர்களே, மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். பயணங்கள் தள்ளி போகும். அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி

அன்பர்களே, நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பண வரவு சுமாராக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி

அன்பர்களே, கடினமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். பெரியோர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கும்ப ராசி

அன்பர்களே, பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். தியானத்தால் மன அமைதி உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மீன ராசி

அன்பர்களே, மன தைரியம் அதிகரிக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts