பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். கோபதாபங்களை குறைத்து கொள்ளவும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். பெரியோர்களின் ஆசி கிட்டும். மனம் மகிழும் செய்தி ஒன்று வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மிதுன ராசி

நேயர்களே, மனதில் மாறுபட்ட யோசனைகள் உதிக்கும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி

நேயர்களே, சொந்த பந்தங்கள் இல்லம் நாடி வருவர். மன பலம் கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப பிரச்னைகள் ஓரளவு குறையும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கன்னி ராசி

நேயர்களே, பழைய சிக்கலுக்கு நல்ல தீர்வு வரும். உறவினர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும். திட்டமிட்ட பயணம் தாமதமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப மதிப்பு உயரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் ஆதரவை பெற முடியும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.

கும்ப ராசி

நேயர்களே, சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பண வரவு தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி

நேயர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். சொந்த காரியங்களை தாமதமின்றி முடிக்க முடியும். உடல் நலம் பலம் பெரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts