பிந்திய செய்திகள்

கட்டணம் செலுத்தாமல் ரெயில் டிக்கெட்….

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மின்னணு வணிக நிறுவனமான பேடிஎம் போஸ்ட்பெய்ட் வகையில் ரெயில் டிக்கெட் புக் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்கு சென்று ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பேடிஎம் வேலெட் வழியாக பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் பெற முடியும். பின் பேடிஎம் நிர்ணயித்துள்ள காலவரையறைக்குள் இந்த பணத்தை நாம் செலுத்தி விட வேண்டும்.

உடனடி பயணங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேடிஎம்மின் போஸ்ட் பெய்ட் சேவை பயனர்களுக்கு கடன் வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த சேவையில் மூலம், 30 நாள்களுக்கு பயன்படுத்துவதற்கு ரூ .60,000 வரை கடன் பெற முடியும். இந்த பணத்தை, குறிப்பிட்ட பில்லிங் தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts