பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, புதிய முயற்சிகள் வெற்றி பெரும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் அலைச்சல் வரும்.

ரிஷப ராசி

நேயர்களே, உறவினர்கள் பாச மழை பொழிவர். சாதுரியமான பேச்சால் காரியம் சாதிக்க முடியும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பர். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மிதுன ராசி

நேயர்களே, பல சிரமத்திற்கு பின் பணம் கைக்கு வரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். திட்டமிட்ட பயணங்கள் தடைப்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கடக ராசி

நேயர்களே, நெருக்கமானர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். கஷ்டமான காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் அதிகாரி ஆதரிப்பார்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

துலாம் ராசி

நேயர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

விருச்சிக ராசி

நேயர்களே, உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். பிரியமானவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

நேயர்களே, முக்கிய காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். மன பிரச்சனைகள் குறையும். புதிய நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

மீன ராசி

நேயர்களே, தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடரும். அடுத்தவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts