பிந்திய செய்திகள்

பயன்படுத்தப்பட்ட போன்களை மிக குறைந்த விலையில் வாங்க இனி தள்ளுபடி

ஃபிளிப்கார்ட் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட போன்களை விற்கும் தனி சேவையை வழங்கி வருகிறது.இதில் ஆப்பிள், கூகுள், சாம்சங், ரியல்மி, ரெட்மி ஆகிய போன்களை வாடிக்கையாளர்கள் நல்ல விலைக்கு விற்கவும், வாங்கவும் முடியும்.ஃபிளிப்கார்டில் விற்கப்படும் இந்த போன்கள் குறைந்த அளவே முந்தைய வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், முழுதாக பாதிப்பில்லாமல் இயக்கூடியதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஃபிளாக்‌ஷிப் போன்கள் முதல் மிட்ரேஞ்ச் சாதனங்கள் வரை இதில் விற்கப்படுகின்றன.பயன்படுத்தப்பட்ட போன்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கும் ஃபிளிப்கார்ட் 47 தர ஆய்வை நிபுணர்களால் செய்யப்பட்டு பிறகே விற்பனைக்கு வைக்கிறது.

பயன்படுத்தப்பட்ட போன்களில் தரத்தை வைத்து அந்த போன் 5 வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த போன்களுக்கு வாடிக்கையாளர்கள் 12 மாத வாரண்டியும் பெறமுடியும். இந்த போன்களை 7 நாட்களில் திரும்பித்தரும் திட்டத்தையும் ஃபிளிப்கார்ட் வைத்துள்ளது.

இந்த பயன்படுத்தப்பட்ட போன்களுக்கு தற்போது தள்ளுபடி, சலுகைகளை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஐபோன் எஸ்இ போன் 32 ஜிபி வேரியண்டை ரூ.8,449-க்கு வாங்க முடியும், ஐபோன் 6எஸ் ஸ்மார்ட்போனை ரூ.11,999 (32ஜிபி) ஐபோன் 6 பிளஸ் ரூ.13,499, ஐபோன் 7 ரூ.14,499க்கும் வாங்க முடியும். 64ஜிபி ஐபோன் எக்ஸ் மாடலை ரூ.30,999க்கு பெற முடியும்.

அதேபோல பிக்ஸல் 3 எக்ஸ் எல் ஸ்மார்ட்போன் (128 ஜிபி) ரூ.15,999க்கு கிடைக்கும். 64ஜிபியின் விலை ரூ.13,899க்கும், பிக்ஸல் 3ஏ எக்ஸ் எல் ரூ.14,275க்கும் கிடைக்கும்.

சாம்சங் போனை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்20 (128 ஜிபி) ரூ.37,999க்கும், சாம்சங் கேலக்ஸி எஃப்62 ரூ.16,990க்கும், சாம்சங் கேலக்ஸி எஃப்12 கேப் ரூ.9997க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts