பிந்திய செய்திகள்

இந்த வார ராசி பலன் 11-04-2022முதல் 17-04-2022 வரை

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். கையில் சேர்த்து வைத்திருக்கும் பணம் சுபகாரியத்திற்க்கு செலவாகப்போகின்றது. சொந்தத் தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவு லாபத்தை பெற போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அனாவசிய வார்த்தைகளை குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி பெறக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத பணவரவு பையை நிரப்பும். நீண்ட நாட்களாக வசூல் செய்ய முடியாத கடன் வசூலாகும். சொந்தத் தொழிலில் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அகலக்கால் வைக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உடல் சோர்வு இருக்கும். உடல் சூட்டை தணிக்க கூடிய பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. கணவன்-மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அனுசரித்து சென்றால் நன்மை நடக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்:

மிதுனராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலம் கிடைக்கக்கூடிய வாரமாக தான் இருக்கப்போகின்றது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், கவர்மெண்ட் உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் காத்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய முன்னேற்றத்திற்கு உங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் உதவியாக நிற்பார்கள். புதிய முயற்சியில் ஈடுபடலாம். சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் என்னதான் உழைத்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் இருக்காது. சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் உஷாராகவே இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற வம்பு சண்டைகளுக்கு செல்ல வேண்டாம். உங்களுக்கு கெட்ட பெயர் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள் மனதிற்குள் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வாருங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கரடுமுரடான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் முட்டி மோதி போராடித்தான் வெற்றி காண்பீர்கள். ஆனால் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் வந்து விடும். துவண்டு விடாதீர்கள். எதையும் சாதிக்கும் மனப்பக்குவம் கொண்ட நீங்கள் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை காண்பீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். வீட்டில் சுபகாரிய விஷயங்கள் கொஞ்சம் தள்ளிப் போகும். சொந்த தொழிலில் தேவையான அளவு லாபம் கிடைக்கும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இருந்த தடைகள் விலகும். எதிர்ப்புகள் அகலும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல வருமானம் உண்டு. வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் நடக்கத் தொடங்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். உடல் உபாதைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். இந்த வாரம் நீங்கள் கையில் எடுத்த காரியம் உங்களுக்கு வெற்றி தான்‌. தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில சங்கடங்கள் வந்து போகும். சுறுசுறுப்பாக வேலையை செய்ய முடியாது. உடல் சோர்வு ஏற்படும். கொஞ்சம் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, இரவு நல்ல தூக்கம் இருந்தால் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். சொந்த தொழிலில் வெற்றி உங்களை தேடி வரும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வருமானத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து சென்றால் நன்மையே நடக்கும். தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப்போகிறது. நீங்களே எதிர்பார்க்காத நிறைய நல்லது உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆகாயத்தில் பறக்க நல்ல வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றது. சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். கோர்ட் கேஸ் வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். தினம் தோறும் ஸ்ரீராமஜெயம் எழுதி பெருமாளை வழிபாடு செய்து வருவது நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நேரத்திற்கு சரியாக சாப்பிட்டு, நேரத்திற்கு சரியாக தூங்குவது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியான உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். சொந்த தொழில் அமோகமாக செல்லும். வேலை செய்யும் இடத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. குடும்பத்தில் உறவினர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த வார தொடக்கத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும், இந்த வார முடிவில் நிறைய நன்மைகள் ஏற்படும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இந்த வார தொடக்கத்தில் லேசாக மன குழப்பம் வரும். ஏப்ரல் மாதம் 13, 14 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டம் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து கண்களை மூடி அந்த ஈசனை நினைத்து சிவாயநம மந்திரத்தை உச்சரித்தால் எல்லாம் நல்லதே நடக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே செலவு இரட்டிப்பாக இருக்கும். இதில் இந்த வாரம் இன்னும் கொஞ்சம் கூடுதல் வீண்விரயம் ஆகப்போகின்றது. என்னதான் முயற்சி செய்தாலும் பழைய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருவீர்கள். தேவையற்ற குழப்பங்களும் கவலையும் இந்த வாரம் இருக்கத்தான் செய்யும். நட்பு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாதவரிடம் உடனடியாக போய் நெருக்கமாக பழக வேண்டாம். குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். அனாவசியமான விஷயத்திற்கு போகாதீர்கள். தினம்தோறும் மனதிற்குள் ஸ்ரீராமஜெயம் சொல்லிக்கொண்டே இருங்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி உறவுக்கு இடையே அனுசரணை தேவை. முன் கோபம் வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். எதிர்ப்பாலினத்தோடு நட்பு வைத்துக் கொள்வதில் கொஞ்சம் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேலதிகாரியிடம் மனஸ்தாபம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சு நடந்துக்கோங்க. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் செலவு அதிகமாக இருக்கும். தினம்தோறும் மகாலட்சுமி நினைத்து வழிபாடு செய்வது நன்மை தரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts