பிந்திய செய்திகள்

வாட்ஸ்அப்பில் டிக்கெட் சேவை அறிமுகம்

மெட்ரோ ரெயில் சேவையை மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி-கட்கோப்பர் வழியில் இயக்கி வருகிறது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப் எனும் வசதியை அறிமுகம் செய்து உள்ளது.

மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) சேவையில் வாட்ஸ்அப் செயலியில் இ டிக்கெட் வழங்கப்படுவது உலகிலேயே இது தான் முதல் முறை ஆகும். தற்போது டிக்கெட் கவுண்ட்டர்களில் கிடைக்கும் பேப்பர் கியூ.ஆர். டிக்கெட் சேவையின் நீட்சி ஆகும். இந்த சேவையில் இணைய பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து `Hi’ என எழுதி 9670008889 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

வாட்ஸ்அப்பில் இ டிக்கெட் சேவை அறிமுகம் செய்த மும்பை மெட்ரோ..! || Mumbai  Metro One Launches e-Ticket on WhatsApp Facility

இது மட்டும் இன்றி மும்பை மெட்ரோ ஆன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காம்போ கார்டுகள், மொபைல் கியூ.ஆர். டிக்கெட்கள் மற்றும் லாயல்டி ப்ரோகிராம் என பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருவதாக தெரிவித்து உள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த எண்ணிக்கை 40 மில்லியன் என கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதனை 100 மில்லியனாக அதிகப்படுத்திக் கொள்ள தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts