பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (17-04-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வரும். விருப்பமானவர்களுடன் திடீர் சந்திப்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மனதில் தெளிவு நிலை பிறக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி

அன்பர்களே, சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

அன்பர்களே, புது திட்டங்கள் நிறைவேறும். புத்தி சாதூர்யத்தால் தடைகளை தகர்த்தெறிய முடியும். பண வரவு தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. உறவினர்கள் நெருக்கடியான நேரத்தில் கை கொடுப்பர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி

அன்பர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். எதிரிகள் ஒதுங்கியே நிற்பர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு ராசி

அன்பர்களே, பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்க நிலை இருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உறவினர்களுடன் வீண் பகை உண்டாகலாம், தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி

அன்பர்களே, திட்டமிட்ட காரியங்களில் தடை ஏதும் இருக்காது. ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். யாரிடமும் வீண் வாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

அன்பர்களே, நண்பர்களிடத்தில் சிறு சிறு மனஸ்தாபம் ஏற்படலாம். சுற்றிருப்பவர்களிடம் அணுசரித்து செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப நலனில் அக்கைறைகொள்ளவும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். சில சமயங்களில் எதிலும் திருப்தி இல்லாத மனநிலை ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts