பிந்திய செய்திகள்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன், மோட்டோ G52 இந்தியாவில் இந்த மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சந்தையில் புதிய மோட்டோ G52 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 9 5ஜி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ G52 ஸ்மார்ட்போனினை ஏற்கனவே ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்து விட்டது.

மோட்டோ G52 சிறப்பம்சங்கள்:

  • 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
  • அட்ரினோ 610 GPU
  • 4GB/ 6GB ரேம்
  • 128GB மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • 50MP பிரைமரி கேமரா
  • 8MP அல்ட்ரா வைடு / டெப்த் சென்சார்
  • 2MP மேக்ரோ கேமரா
  • 16MP செல்பி கேமரா
  • 5000mAh பேட்டரி
  • 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோ

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts