பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (18-04-2022)

மேஷ ராசி

அன்பர்களே, நட்பு வழியில் நன்மை வந்து சேரும். கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். முக்கிய காரியங்களில் அவசரம் காட்ட வேண்டாம். புது தொழில் யோகம் அமையும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். வரும் எதிர்ப்புகளை முறியடிக்க முடியும். கடன் பிரச்சனை ஓரளவு தீரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி

அன்பர்களே, பேச்சில் வேகமும், விவேகமும் இருக்கும். புது முயற்சிகளை தள்ளி வைக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். விஐபிகளின் தொடர்பால் நன்மை உண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்ம ராசி

அன்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். பெற்றோர்கள் உதவி கரம் நீட்டுவர். மனதிற்கு பிடித்தமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாழ்க்கையில் தரத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். புதிய யோசனைகள் சரியாக கைகொடுக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தாரிடம் வீண் வாக்குவாதம் வந்து போகும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்ப மதிப்பு உயரும். புதிய நண்பர்கள் மூலம் லாபமும், ஆதாயமும் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தாரின் தேவைக்காக அதிக நேரம் செலவிட நேரிடும். மனமும், உடலும் புத்துணர்வுடன் செயல்படும். புது நபர்களிடம் கவனமாக பழகவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

அன்பர்களே, எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாகும். உறவினர்கள் சிலரால் விரயம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, நல்ல மனிதர்களின் சந்திப்பு நன்மையில் முடியும். சொத்து விவகாரத்தில் வில்லங்கம் இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் உண்டாகும். உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts