பிந்திய செய்திகள்

இந்த வார ராசிபலன் 18/04/2022 முதல் 24/04/2022 வரை

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன திருப்தியான வாரமாக இருக்கப்போகின்றது. உங்களுடைய எல்லா கடமைகளையும் சீரும் சிறப்புமாக செய்து முடிக்க போறீங்க. நீண்ட நாட்களாக நடக்காத காரியங்கள் இந்த வாரத்தில் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆனால், இந்த வாரம் 19, 20 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு கொஞ்சம் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். காரணம் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. சிலசமயம் பதட்டமாக இருக்கும்போது சில முடிவுகளை தவறாக எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. லேசான மன குழப்பம் இருக்கும். சொன்னதை செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்காதீங்க. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வீண் விரையம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணவிஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்கள் வீட்டில் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் சட்டை சச்சரவுகளை தவிர்க்கலாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்களே அறியாத நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு, கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய புத்திசாலித்தனத்தை பார்த்து அடுத்தவர்கள் பாராட்டும் அளவிற்கு உங்களுடைய திறமை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு இது நல்ல நேரம். வாராக் கடன் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வீட்டில் உங்களுடைய முன்னேற்றத்திற்கு பெற்றோர்கள் உறுதுணையாக நிற்பார்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அருமையான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுக்கு மேலும் மேலும் சங்கடங்களும் கஷ்டங்களும் வந்து கொண்டே இருந்தாலும், இறுதியில் ஜெயிக்கப் போவது நீங்கள் தான். வேலை செய்யும் இடத்தில் மேலும் மேலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய அறிவுத்திறன் வெளிப்படும். மேலதிகாரிகள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு உங்களுடைய ஆற்றல் வெளிப்படும். சில சமயங்களில் பிரச்சனை என்று வரும் போது நீங்கள் மௌனமாக இருப்பது தான் நல்லது. அனாவசியமாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு தான் பிரச்சினை வரட்டும், ஆழ்மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள் வெற்றி உங்கள் பக்கமே. சோர்வடைய வேண்டாம். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. தேவையற்ற சண்டை சச்சரவுகள் வீடு தேடி வரும். ஆகவே அக்கம்பக்கத்தினரிடமும், உறவினர்களிடமும் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் நீங்கள் போய் முன் நிற்காதீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கரடுமுரடான வாரமாக தான் இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகள் எடுப்பதாக இருந்தால் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். சின்னச்சின்ன சிக்கல்களை நீங்கள் சந்தித்து வந்தாலும் கஷ்டத்தை பங்கு போட்டுக்கொள்ள 4 நல்லவர்கள் உங்களுடனே இருப்பார்கள். எதிரிகளின் தொல்லை இருக்காது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலம் உங்கள் பக்கம் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சூதாட்டத்தில் கட்டாயமாக ஈடுபடவே கூடாது. தினம்தோறும் ஒவ்வொரு நிமிடமும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக அமையப்போகின்றது‌. வீட்டில் சுபகாரிய செலவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சுக்கு நிச்சயம் மறு பேச்சு இருக்காது. உங்கள் கை ஓங்கி நிற்கும். சொந்தத் தொழிலை விரிவு படுத்தலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த வார இறுதியில் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அலைச்சல் உண்டாகும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான அதிர்ஷ்டம் தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக அடைக்க முடியாத கடனை அடைப்பீர்கள். உங்களைத் தொடர்ந்து வந்த நிறைய சிக்கல்கள் ஒவ்வொன்றாக படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சொந்தத் தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அந்த திருப்பும் உங்களுக்கு லாபம் கொடுப்பதாகத் தான் இருக்கும். கெட்டவர்கள் தானாக உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். நல்லவர்களின் பழக்கவழக்கங்கள் விரிவடையும். மன தைரியம் அதிகரிக்கும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்கார்களுக்கு இந்த வாரம் நிறைவேறாத ஆசை எல்லாம் நிறைவேற போகின்றது. நீண்ட நாட்களாக இதை மட்டும் என்னால் செய்யவே முடியவில்லை என்ற காரியத்தை, இந்த வாரம் தொடங்குங்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தலைக்கு மீறி சென்ற நிறைய கெட்ட விஷயங்கள் எல்லாம் உங்களை விட்டு தூர ஓடிப் போய்விடும். மனக்குழப்பங்கள் நீங்கும். மன நிம்மதி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கின்றது. எடுக்கக்கூடிய முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் ஏற்படும். தடைகளைக் கண்டு துவண்டு போக வேண்டாம். இறுதியில் வெற்றி நிச்சயமாக கிட்டும். பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். அனாவசியமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் செலவு செய்ய பணம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கொண்டே இருக்கும். தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு அப்போது நன்மைகள் நிறைய நடப்பது போல தெரிந்தாலும் இறுதியில் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். அவரவர் வேலையை அவரவர் கூடுதல் கவனத்தோடு செய்வது மிகவும் நல்லது. கவனக்குறைவு சில பிரச்சினைகளை உண்டு பண்ணுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். இந்த வாரம் முழுவதும் மனதை ஒருநிலைப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மூளை சொல்வதை மனது கேட்டு தான் ஆகவேண்டும். எது தவறு, எது சரி என்று நன்றாக ஆராய்ந்து முடிவெடுங்கள். தினந்தோறும் நரசிம்மர் வழிபாடு மன அமைதியைத் தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப்போகின்றது. இருப்பினும் உங்களுடைய மனதில் ஏதோ ஒரு சஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். நாம் எதிர்பார்த்த விஷயம் நல்லபடியாக நடக்குமா என்ற கேள்விக்குறியோடு இருப்பீர்கள். ஆனால் பயம் வேண்டாம். சில பிரச்சனைகள், சில தடைகள், சில அலைச்சல்கள் வந்தாலும் இறுதியில் வெற்றி காண்பது நீங்கள் மட்டும்தான். ஆகவே செய்யக்கூடிய நல்ல காரியங்களை முழுமனதோடு திருப்தியோடு செய்யுங்கள். எதையும் கண்டு அஞ்ச வேண்டாம். சொந்த தொழிலில் நல்ல லாபம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தோடு கோயில் குளத்திற்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts