பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (21-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, எதிரிகளின் பலம் பாதியாக குறையும். வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.

ரிஷப ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. வாகனம் வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிடையே இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

நேயர்களே, சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். புது முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். சொத்து வழக்கில் வில்லங்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.

கடக ராசி

நேயர்கர்கள், எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக நடக்கும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

நேயர்களே, நம்பியவர்களுக்கு நல்லுதவி செய்ய முடியும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க தொடங்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, இழுபறியில் இருந்த பணிகள் சீக்கிரத்தில் முடியும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். உடல் நலம் சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். பேச்சில் நிதானம் அவசியம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, கோப தாபங்களை குறைத்துக்கொள்ளவும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

நேயர்களே, பயணங்கள் சில சமயங்களில் அலைச்சலை தரும். அடுத்தவரின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டாம். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப செல்வாக்கை உயர்த்த முடியும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் கவனம் தேவை.

கும்ப ராசி

நேயர்களே, அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். திட்டமிட்ட காரியம் கைகூடும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் வசதிகள் பெருகும். எதையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் சாமர்த்தியம் இருக்கும். நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts