பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (22-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். பிரியமானவர்கள் ஆதரவு திருப்தியளிக்கும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, வாழ்க்கை தரத்தை உயர்த்திகொள்ள வழி கிடைக்கும். எடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் யாரும் புரிந்துக் கொள்ளவில்லையே என ஆதங்கம் இருக்கும். விரோதிகளும், நண்பர்களாக மாறுவர். முக்கிய பணிகள் முடிவடையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அலைச்சல், டென்ஷன் வெகுவாக குறையும். நாள் பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

நேயர்களே, உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். உறவினர்கள் வகையில் ஒற்றுமை பிறக்கும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப நபர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான அலைச்சல் இருக்கும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் திருப்தி நிலை உண்டாகும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த நெருடல்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தியானத்தால் மனநிம்மதி கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி

நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர்கள் பாச மழை பொழிவர். யாரையும் குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்ப பொறுப்புணர்ந்து செயல்படுவது சிறப்பு. சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்ப பாரம் குறையும். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும் .

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். அநாவசியச் செலவுகளை குறைக்கவும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். உத்யோகத்தில் கவனம் தேவை.

மீன ராசி

நேயர்களே, சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts