பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (23-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிக்கவும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, பெரியவர்களின் அறிவுரை கேட்டு நடப்பது நல்லது. ஆன்மீக வழிபாடு மன அமைதியை தரும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மிதுன ராசி

நேயர்களே, யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் காரணமாக சோர்வு ஏற்படலாம். வேண்டியவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கடக ராசி

நேயர்களே, மனதில் தெளிவு நிலை உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் மேன்மை நிலை உண்டாகும். பெற்றோர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். பணவரவு சுமாராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

துலாம் ராசி

நேயர்களே, புதிய விஷயங்களில் ஆர்வம் கூடும். அடுத்தவர் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். கணவன் மனைவிக்குள், இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழிலில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

தனுசு ராசி

நேயர்களே, புது சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் தேடி வரும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும். விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். உறவினர்களிடம் சின்ன விரிசல் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். குலதெய்வத்தின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts