பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (24-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, விரும்பிய பொருட்களை வாங்க முடியும். யோசிக்காமல் யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். எதிர்பார்த்த பண வரவு தாமதமாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். இனம்புரியாத பயம் வந்துப் போகும். சொத்து வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உடல் நலம் மேன்மை பெரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி

நேயர்களே, மன தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பெற்றோர்கள் உதவி கரம் நீட்டுவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி

நேயர்களே, சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் கடினமான காரியங்களையும் எளிதில் முடிக்க முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப அடிப்படை வசதிகள் பெரும். புதிய முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் வந்து நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவாகினும் அது நிறைவேறும். உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். மகான்களின் தரிசனம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, பழைமையான விஷயங்களில் ஆற்வம் கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்க முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி

நேயர்களே, வசீகர பேச்சால் எல்லோரையும் கவர முடியும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மகர ராசி

நேயர்களே, எடுத்த சவாலில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். பிரபலங்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கும்ப ராசி

நேயர்களே, வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மீன ராசி

நேயர்களே, அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts