பிந்திய செய்திகள்

இந்த வார ராசி பலன் 25/04/2022 முதல் 01/05/2022 வரை

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறையும். மகிழ்ச்சி உங்களை திக்குமுக்காட செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை சமயோசிதமாக செயல்படுவது நல்லது.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். உங்கள் தரப்பு நியாயங்களை ஆணித்தரமாக எடுத்து வைப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். தேவையற்ற பொருட் செலவை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. எடுத்த பின்பு அதை மாற்றிக் கொள்வதில் பிரயோசனமில்லை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டுத் தொழில் துவங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. துறைசார் நிபுணர்களின் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் பதில் கிடைக்கும்.

கடகம்:

i கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேடல் தூங்குவதற்கான தருணமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த ஒற்றுமை மேலும் வலுவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை இருக்கும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிடுசிடுவென்று முகத்தை இனிமையாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே பேச்சுவார்த்தை இனிமை தேவை. முன்கோபம் தவிர்ப்பது உத்தமம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் விடாப்பிடியாக தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பது நல்லது. பலரும் உங்களை குழம்ப செய்து விடுவார்கள் எனவே கவனம் தேவை.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு அனுகூலம் உள்ள அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தொலைதூர நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உபகரணங்கள் பழுதடைய வாய்ப்புகள் இருப்பதால் வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருட் சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையில்லாத வீண் அலைச்சல் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் எதையும் கையாளுவது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகளுக்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு. சுய முடிவு சுய லாபத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் மூன்றாம் நபர்கள் உடைய அறிமுகம் தவிர்த்து விடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் புதிய பொலிவு காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த ஊடல் மறையும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வியாபார விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட கால வேண்டுதல்கள் நிறைவேறுவதாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் யாருடைய கையையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்களுடைய சொந்தக் காலில் நின்று நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க போகிறீர்கள். உங்களை ஏளனம் பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நடக்கும் அளவிற்கு ஒரு சில நல்ல காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத அலைச்சல் மன கஷ்டத்தின் மூலம் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு நிம்மதியை புத்துணர்ச்சியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பாராட்டுகளும் சம்பள உயர்வும் கிடைக்கும். வார இறுதியில் கை செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகின்றது. தேவையில்லாத பல பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து அப்பாடா என அமரப் போகிறீர்கள். வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும். வீட்டில் வேலை செய்யும் பெண்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காய்கறிகள் நறுக்கும்போது அடுப்பில் சமைக்கும் போது கவனம் அதிகமாகவே இருக்கட்டும். ரத்த காயம் ஆவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். விரோதிகளும் உங்களிடம் முட்டி மோதி ஜெயிக்க முடியாமல் சோர்ந்து போக போகிறார்கள். தினந்தோரும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். இருந்த போதிலும் உங்களுடைய வேலையில் எந்த தடையும் இருக்காது. நீங்கள் செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் மதிப்பும் உயரும். உயர்பதவிகள் கிடைப்பதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளது. பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். கையிலிருந்து பணம் தண்ணீராக செலவாகும். இருப்பினும் கடன் வாங்காதீர்கள். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். முடங்கிப்போன தொழில் கூட முன்னேற்றத்தை அடையும். புதிய எதிர்பாலின நட்புகளுடன் கொஞ்சம் உஷாராக இருங்கள். தெரியாத மனிதர்களிடம் பழகும்போது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிறகு கெட்டபெயர் உங்களுக்கு தான் வரும். தினம்தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் பல நன்மைகள் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts