பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (27-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, மனதில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள் சிலர் இல்லம் நாடி வருவர். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். புது முயற்சிகள் தடைப்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ரா

நேயர்களே, வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். எதிரிகள் விலகுவர். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஆரவாரம் நிறைந்து காணப்படும். தேவையான பொருட்களை வாங்க முடியும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். உடல் சோர்வு நீங்கும். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.

துலாம் ராசி

நேயர்களே, தியானம் மன அமைதியை தரும். திடீர் பயணங்களால் செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புரியாத விஷயங்கள் எளிதில் புரிய வரும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிட வேண்டாமாம் உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு ராசி

அன்பர்களே, பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். உறவினர்களிடம் இருந்த பகைமை நீங்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

மகர ராசி

நேயர்களே, கடினமான வேலைகளை கூட சாதாரணமாக செய்ய முடியும். விருந்தினர் வருகை இருக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

நேயர்களே, மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். எதிர்பார்த்தது ஒன்றும், நடந்தது ஒன்றும்மாக இருக்கும். பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்ற ஏற்படும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப சூழல் சாதகமாக இருக்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts