பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (29-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, திட்டமிட்ட பயணங்கள் திருப்திகரமாக அமையும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

ரிஷப ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

நேயர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி

நேயர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பழைய இனிமையான நினைவுகள் நினைவுக்கு வரும். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பர். உத்யோகத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, மன வலிமை அதிகரிக்கும். புது நண்பர்களின் ஆதரவு மனதிற்கு புது உற்சாகம் தரும். வெளி உணவை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தேக நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி

நேயர்களே, பழைய பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சவாலான காரியங்களை எளிதில் முடிக்க முடியும். பெரியோர்கள் நல்வழி காட்டுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி

நேயர்களே, யாருக்கும் யாரையும் சிபாரிசு செய்ய வேண்டாம். புது பொருள் சேர்க்கை உண்டாகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மகர ராசி

நேயர்களே, எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

கும்ப ராசி

நேயர்களே, புதிய முயற்சிகள் தள்ளி போகும். உறவினர்கள் சாதகமாக பேச தொடங்குவர். எதிர்த்து நின்றவர்கள் கூட தானாக ஒதுங்கி போவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீன ராசி

நேயர்களே, வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts