பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (02-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, எதிர்பார்த்த காரியங்கள் தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். பழையமான விஷயங்களில் ஆர்வம் கூடும், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, புது முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி

நேயர்களே, கனிவாகப் பேசி காரியம் சாதிக்க முடியும். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். முன் கோபத்தை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். நட்பால் நன்மை வந்து சேரும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். பயணத்தால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

தனுசு ராசி

நேயர்களே, தியானம் மன அமைதியை தரும். பிரியமானவர்கள் வகையில் எதிர்பாராத செலவு வரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி

நேயர்களே, மனதிற்கு பிடிக்காத விஷயங்களை செய்ய வேண்டாம். கொடுத்த வகை காப்பாற்ற முடியும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

நேயர்களே, சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரியமானவர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மீன ராசி

நேயர்களே, உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். மனதில் இருந்த வீண் கவலை அகலும். உணவு கட்டுப்பாடு அவசியம் தேவைப்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts