பிந்திய செய்திகள்

இந்த வார ராசி பலன் 02-05-2022 முதல் 08-05-2022வரை

மேஷ ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் விரைவில் நடக்க வழி பிறக்கும். குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும், ஆகையால் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். குடும்பத்தில் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கடன் பிரச்சனையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளவும். எதிர்பார்த்த பண உதவிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் கிடைக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து போகவும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாற்றலாகி செல்லகூடும். புதிய வண்டி, வாகனம் வாங்க முடியும். நண்பர்கள் வழியில் நன்மைகள் உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப தேவைகள் அதிகம் இருப்பதால் அதற்காக நிறைய போராட வேண்டி இருக்கும். கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். முக்கிய விஷயங்களில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படவும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை குறைத்துக்கொள்ளவும். பொது பிரச்சனைகளில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. சுப விரயங்களால் எதிர்பார்த்ததை விட அதிகம் செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : குலதெய்வத்தை முறையாக சென்று வழிபடவும்.

மிதுன ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த பல விஷயங்கள் நடக்க நிறைய வாய்ப்புண்டு. பல நாட்களாக இருந்து வந்த மன பிரச்சனை நாளடைவில் தீரும். பண வரவு நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனமாக இருக்க கற்றுக்கொள்ளவும். மனதில் மனதில் புது புது எண்ணங்களை செயல்படுத்த முடியும். குடும்பத்தில் திருமணம் மற்றும் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். பெண்கள் வகையில் ஒரு சில நன்மைகள் உண்டு. எதிர்பாராத சில மருத்துவ செலவு வரும். கணவன் மனைவிடையே மனம்விட்டு பேசுவது குடும்பத்திற்கு நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் யாரிடத்திலும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : மகாலக்ஷ்மியை வணங்கி வழிபடவும்

கடக ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அதை முழுமனதோடு செய்தால் வெற்றி நிச்சயம். உங்கள் வரவும், செலவும் சரிசமமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சுப விரயங்கள் மற்றும் ஆடம்பர செலவுகள் அதிகம் உண்டு. நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். பணம் நடமாட்டம் இருப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலை வராது. பண வரவுகள் கூட அதிக அலைச்சல் பிறகே கைக்கு வந்து சேரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். கணவன் மனைவி இருவரும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துடன் சுற்றுள்ள செல்ல விருப்பம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். அடுத்தவர்களை நம்பி முக்கிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நல்லது. அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குல தெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்தி கடனை செய்யவும். குடும்பத்தில் நபர்களை அனுசரித்து செல்வது நன்மையை தரும். அவசர நேரங்களில் எடுக்கும் முடிவுகளால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கன்னி ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் பேச்சு திறமையால் அணைத்து விஷயங்களையும் சாதித்து காட்ட முடியும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பண வரவுகள் எதிர்பார்த்தபடி இருக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்களிடையே கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் தேடி வருவர். மிக முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மையையும் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் அன்பு பாசம் அதிகரிக்கும். உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : புதன்கிழமை பெருமாளை வழிபடவும்

துலாம் ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விஷயங்களில் அடுத்தவர்கள் அதிகம் தலையிடாமல் இருப்பது நலம் தரும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பண வரவு காரணமாக குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். புது வண்டி வாங்கும் யோகம் உண்டு. யாரும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உடன்பிறப்பு வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். எதிர்பாராத வகையில் பொருள் விரயம் ஏற்படும். நண்பர்கள் சில நேரங்களில் உங்களுக்கு எதிராக செயல்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.உத்யோகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, ஆன்மீக பெரியோர்களின் அறிமுகமும், அவர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் பெரிய வெற்றிகள் கிடைக்கும். பணப்பிரச்னைகள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற கடுமையாக முயற்சி செய்வீர்கள். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வாகன யோகம் உண்டு. உடன்பிறப்புகளால் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். வழக்கு சம்பந்தமான சமாதான முயற்சிகள் பலன் தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டில் ஏதோ ஒரு வகையில் மருத்துவ செலவுகள் வரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நல்லது நடக்க ஆரம்பிக்கும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்

தனுசு ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, தெய்வ காரியங்களில் சிந்தனை செல்லும். மன நிம்மதிக்காக தினமும் தியானத்தில் ஈடுபடவும். எந்த செயலிலும் சரியான முடிவு எடுக்க கூடிய மனநிலை உருவாகும். குடும்ப பொருளாதார நிலை சீராக இருக்கும். செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வரவேண்டிய பணம் எந்த வித தடையுமின்றி வரும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். பெற்றோர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்

மகர ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, முக்கிய காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப வளர்ச்சியில் உங்கள் பங்கு அதிகமாக இருக்கும். உங்கள் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்கவும். உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். எதிர்பாலினத்தவருடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மனதில் பட்டதை தைரியமாக பேசும் தைரியம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
பரிகாரம் : வியாழன்தோறும் ஆஞ்சநேயரை வழிபடவும்

கும்ப ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பல எதிர்பாராத நன்மைகளை பெற முடியும். மன சோர்வு, உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பெற்றோர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் சுப செலவுகள் நிறைய உண்டு. தெய்விக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டு. வாகனத்தில் மெதுவாக செல்லவும். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் பணிகளை கவனமாக செய்யவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிப்படவும்

மீன ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருப்பவர்களிடம் முக்கிய விஷயங்களில் விட்டுக்கொடுத்து போகவும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட இப்போது ஒதுங்கி நிற்பர். வெளியிடங்களில் அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது மூலம், வரும் பிரச்னைகளை தவிர்க்கலாம். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நல்லவர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு ஓரளவு இருக்கும். பல நாட்களாக தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எழுந்த பிரச்சனைகள் தீரும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் மாற்றம் ஏற்படும். புது தொழில் யோகம் உண்டு.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts