பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (04-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, உறவினர்கள் அன்பு பாராட்டுவர். பழைய வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்வு வரும். உத்யோகத்தில் கவனம் தேவை.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப நபர்கள் பக்கபலமாக இருப்பர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் பழகவும். உத்யாகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி

நேயர்களே, குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து போகும். புது தொழில் யோகம் அமையும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப அந்தஸ்து வெகுவாக உயரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தேவையில்லாத டென்ஷன் வந்து போகும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட குறைகள் நீங்கும். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டிவரும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிக ராசி

நேயர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. ஆன்மீக எண்ணம் மேலோங்கும். நண்பர்களால் சில சிக்கல்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். ஒதுங்கி நின்றவர்கள் கூட விரும்பி வந்து சேருவர். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசி

நேயர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். பிடிவாதப் போக்கை கைவிடவும். நண்பர்களிடம் கேட்டது கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மீன ராசி

நேயர்களே, நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். முக்கிய விஷயத்தில் அனுபவ அறிவை வெளிப்படுத்தவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts