பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (05-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து நீக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தம் நீங்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி

நேயர்களே, ஆடம்பரச் செலவுகளால் பண விரையம் ஏற்படும். நட்பால் நன்மை வந்து சேரும். பிரியமானவர்கள் வழியில் மனசங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை இருக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குல தெய்வ வழிபாடு நல்ல விதமாக அமையும். நல்ல தகவல் ஒன்று காதில் வந்து விழும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி ராசி

நேயர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம் ராசி

நேயர்களே, எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். பெற்றோரின் அரவணைப்பு கிட்டும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். மனதில் உருவான இனம்புரியாத பயம் நீங்கும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்ப எதிர்ப்புகளை எதிர்கொள்ள முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மகர ராசி

நேயர்களே, தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு வந்துப் போகும். முக்கிய காரியங்களை போராடி முடிக்க வேண்டிவரும். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

நேயர்களே, அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts