பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (07-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, மனதில் உயர்வான எண்ணங்கள் உதிக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் பார்க்க வேண்டாம். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். மனதில் இருந்து வந்த குழப்ப நிலை தீரும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.

மிதுன ராசி

நேயர்களே, முக்கிய வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். சுற்றி இருப்பவர்கள் ஆதரவு பெருகும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப நபர்களால் அலைச்சல் ஏற்படும். கடினமாக வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்ய முடியும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெற்றோர்களுடன் அனுசரித்து போகவும். உணவு கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கன்னி ராசி

நேயர்களே, உங்களது பேச்சில் மென்மையும், மேன்மையும் இருக்கும். உறவினர்களின் அன்பு சந்தோஷத்தை தரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி

நேயர்களே, சுப செய்தி ஒன்று காதில் விழும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் இருக்கும். மனதில் புதுமையான சிந்தனைகள் தோன்றும். தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

தனுசு ராசி

நேயர்களே, பிரபலங்களின் சந்திப்பு உற்சாகம் தரும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். நண்பர்களுடன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் கவனம் தேவை.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். உடல் சோர்வு முற்றிலும் நீங்கும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீன ராசி

நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டுவர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts