பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (10-05-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்ப நன்மை மேலோங்கும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

ரிஷப ராசி

அன்பர்களே, பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி

அன்பர்களே, இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். எதிரிகள் விலகுவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடக ராசி

அன்பர்களே, யாருக்கும் பணம் தொடர்பாக வாக்குறுதி தர வேண்டாம். விருப்பங்கள் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்ப அடிப்படை வசதிகள் உயரும். காரிய அனுகூலம் உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.

கன்னி ராசி

அன்பர்களே, செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். உறவினர்கள் சிலர் எதிராக செயல்படுவர். சொந்த பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, மற்றவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

அன்பர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மகர ராசி

அன்பர்களே, சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடிவடையும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கும்ப ராசி

அன்பர்களே, வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

அன்பர்களே, திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். மற்றவர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts