பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (11-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். புது நட்பால் நன்மை உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த காரியம் விரைவில் நடக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் சில சங்கடங்கள் வரும். சம்மதமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். மன தைரியம் அதிகரிக்கும். பண வரவில் சில நெருக்கடிகள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அயல்நாடு சென்று வரும் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். பொருளாதார நிலை சீராக இருக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உத்யோகத்தில் பணிசுமை கூடும்.

விருச்சிக ராசி

நேயர்களே, செலவுகளை குறைத்து சேமிக்கத் பழகவும். உணவில் கவனமும், சீரான ஓய்வும் அவசியம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்ப வாழ்வில் சில நெருடல்கள் வரலாம். எதிர்த்து நின்றவர்கள் கூட விலகி நிற்பர். புதிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அகலும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் சில சலசலப்புகள் தோன்றி மறையும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மீன ராசி

நேயர்களே, அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். டென்ஷன், அலைச்சல் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts