பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, மனதில் புதிய தெம்பும், உற்சாகமும் உண்டாகும். பேச்சு சாதுரியம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்

மிதுன ராசி

நேயர்களே, முக்கிய காரியங்கள் இனிதே நடைபெறும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

சிம்ம ராசி

நேயர்களே, பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். எதிர்பாராத செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். பணவரவு இருக்கும். யாரையும் நம்பி உறுதி மொழி தரவேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

துலாம் ராசி

நேயர்களே, கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்ற முடியும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். நல்லவர்களின் நட்பால் நன்மை உண்டு. பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பெற்றோரிடம் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

நேயர்களே, ஆன்மீக வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பொருள் சேர்க்கை உண்டாகும். சாமர்த்தியமாக பேசி நினைத்ததை சாதிக்க முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். புது முயற்சிகளை தள்ளி போடவும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts