பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-05-2022)

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் சுப காரிய தடைகளை தாண்டி முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் தன லாபம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய இனிய நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்

. மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எத்தகைய முடிவுகளையும் துணிச்சலுடன் எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுவாகும். எதையும் சமாளிக்க கூடிய வல்லமை பெறுவீர்கள். குடும்பத்தின் மீது கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராகும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை தைரியமாக முன் வைப்பீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தேவையற்ற கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே இருக்கும் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது நல்லது.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய உத்திகளை கையாளுவது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் படிப்படியாக குறைய தொடங்கும்

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்பு சுமை கூடும் என்பதால் டென்சனுடன் காணப்படுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் கவனம் தேவை. மூன்றாம் மனிதர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அசராமல் அதை எதிர் கொள்வீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ண ஓட்டங்கள் தடுமாற்றத்துடன் காணப்படும். எது சரி? எது தவறு? என்கிற முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய சிந்தனைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனக்குறைகள் நீங்கி குடும்பத்துடன் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற பழைய விஷயங்களை பற்றிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை குறையும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டிய சூழ்நிலை உண்டு.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் மன வருத்தத்தை கொடுக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் இருக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts