பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (16-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். நட்பால் நன்மை உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, பெற்றோர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். கடன் பிரச்சனை ஓரளவு சீராகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்ம ராசி

நேயர்களே, ஆன்மீக வழிபாடு சிறப்பான பலன் தரும். பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பர். புது வீடு மாற்றம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, தடைப்பட்ட காரியங்கள் விரைவில் முடிவடையும். வசதி வாய்ப்புகள் பெருகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு ராசி

நேயர்களே, யாருடைய கருத்துக்கும் செவி சாய்க்க வேண்டாம். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிடையே இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, உங்கள் விருப்பங்கள் நிறைவேற வழி பிறக்கும். மனக்குழப்பம் நீங்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

கும்ப ராசி

நேயர்களே, முக்கிய நபர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. பணவரவில் சின்ன தடைகள் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, பொது பிரச்சனையில் தலையிட வேண்டாம். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும். புது தொழில் யோகம் அமையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts