பிந்திய செய்திகள்

இந்த வார ராசிபலன் 16/05/2022 முதல் 22/05/2022 வரை

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷத்துக்கு எந்த குறையும் இருக்காது. ஆனாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குழப்பம், ஏதோ இழந்ததை போல நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். கவலைப்படாதீர்கள், உங்களுக்கு எல்லாம் நல்லதாக தான் நடக்கும். ஆனால் கொஞ்சம் தாமதமாக நடக்கும். முட்டிமோதி தான் சின்ன சின்ன வேலையில் கூற வெற்றி அடைய வேண்டிய சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அடுத்தவர்களுடைய பேச்சை கேட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினம்தோறும் விநாயகரை நினைத்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். இந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் நிறைய கவனம் தேவை. எந்த விஷயத்திலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவுகளை எடுக்கக் கூடாது. ஒன்றுக்கு பலமுறை பொறுமையாக சிந்திக்க வேண்டும். ரொம்பவும் முக்கியமான வேலையாக இருந்தால் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். புதியதாக நண்பர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய சொந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். நின்றுபோன சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். இந்த மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் நீங்கள் ரொம்பவும் கவனமாக இருக்கவேண்டும். சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பை தரும். புதிய தொழில் தொடங்கலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் எப்போதும் நிறைவாக இருக்கும். உங்களை சுற்றி புதிய நட்பு வட்டாரம் விரிவடையும். உங்களுடைய பேச்சாற்றலை பாராட்டி வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வும் கிடைக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது இரட்டிப்பாக வரும். சந்தோஷமாக இருங்கள். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூர பயணம் பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்‌. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கூடுமானவரை அனாவசியமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:

ம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கரடு முரடான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் எதிர்ப்புகள் வந்து நிறையும். நீங்கள் எந்த விஷயத்தைத் தொட்டாலும், அதை உங்கள் எதிரே நிற்பவர் வேண்டாம், இதில் நீ தோற்றுப் போய் விடுவாய் என்று குழப்பிக் கொண்டே இருப்பார்கள். இருப்பினும் உங்களுடைய விடாமுயற்சி உங்களுடைய தன்னம்பிக்கை உங்களுக்கான வெற்றியை தேடித்தரும். சிக்கல்கள் வந்தாலும் அதிலிருந்து வெளிவர கூடிய திறமை உங்களிடம் உண்டு என்று நம்புங்கள். எதிலும் கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனக்குறைவு கூடாது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை மட்டும் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கஷ்ட நஷ்டங்கள் சேர்ந்த வாரமாக தான் இருக்கப்போகின்றது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சண்டை என்று வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள். யாராவது ஒருவர் வாயை மூடிக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இரண்டு பேரும் வாய் மூடாமல் சண்டை போட்டால் விவகாரம் ஆகிவிடும். பின்பு கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் கிடையாது. மற்றபடி வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் லாபம் அதிகமாக இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் இடத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் இருக்க வேண்டும். தினம்தோறும் வாராகி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேவையற்ற வீண் விரயங்கள் மருத்துவ செலவுகள் ஏற்படும். வேறு வழியே கிடையாது அதை நீங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும். மற்றபடி வேலை செய்யும் இடத்தில் இருந்த எதிரிகள் தொல்லை நீங்கும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இந்த வார இறுதியில் வெளியூர் பயணம் இருந்தால் அதை தவிர்த்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்க்காத நிறைய நல்லது நடக்கத் தொடங்கும். ஆனால் யாரையும் நம்பி எதற்காகவும் வாக்குக் கொடுக்காதீர்கள். நாளை நான் இதை செய்கின்றேன், அடுத்த வாரம் இதை செய்கின்றேன் என்று தயவுசெய்து யாரிடமும் வாக்குக் கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். அனாவசியமான பேச்சு சிக்கலில் கொண்டு போய்விட வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். தாய் மாமன் வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பமான வாரமாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை இருக்காது. இதில் ஜெயிப்போமா ஆத்தோரமா என்ற ஒரு தடுமாற்றம் இருக்கும். வேலையை செய்து முடிக்க கொஞ்சம் சிரமப்படுவீர்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை முடித்து தர முடியாமல் சில நேரங்களில் தலைகுனிவு கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் முயற்சியை கைவிடாதீர்கள் உங்களால் எல்லா விஷயத்திலும் வெற்றி காண முடியும். தினமும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் மதிப்பும் உயரத் தொடங்கும். பணவிஷயத்தில் சிக்கலில் இருப்பீர்கள். யாராவது எந்த ரூபத்திலாது பணத்தை கொடுத்து உங்களுக்கு உதவுவார்கள். எந்த நல்ல காரியமும் பணம் இல்லை என்ற காரணத்தால் நின்று போவதற்கு வாய்ப்பே கிடையாது. கவலைப்படாதீங்க. மனைவியை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்‌ கவனக்குறைவு ஏதாவது பிரச்சினையில் கொண்டு போய்விடும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் ரொம்பவும் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள். முடியவே முடியாது என்ற விஷயத்தில் கூட தைரியமாக கால்வைத்து, நல்லபடியாக வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். சொத்து சுகம் வாங்க வேண்டிய நல்ல நேரம் வந்து விட்டது. வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்கும். குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள் நல்ல செய்தி வந்து சேரும். கடன் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வெளியூர் பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்து அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டால் வாழ்வில் எங்கோ செல்லலாம். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாவற்றிலும் வெற்றி தான். நீங்கள் தோற்று போயிடுவாங்க நெனச்சு எது செஞ்சாலும் அது கூட, உங்களுக்கு வெற்றி தரும் பாருங்களேன். அந்த அளவுக்கு நேரம் நன்றாக உள்ளது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்கள் அல்லவா, அப்படி வாய்ப்பு கிடைக்கும்போது அதை நன்றாக பயன்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அழகான பொருட்களை பார்த்து மனதை பறிகொடுக்காதீங்க. அழகில் ஆபத்தும் இருக்கும். தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதில் ஜெபித்து வந்தால் வெற்றி உங்களுக்கே.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts