பிந்திய செய்திகள்

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் விமானம்-இஸ்ரேலிய நிறுவனம் தயாரிப்பு

இஸ்ரேலிய நிறுவனம்ஒன்று மின்சார கார் மற்றும் செல்போன் போன்றவற்றுக்கான மின் கலங்களுக்கு இணையான தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய பயணிகள் விமானம் ஒன்றை தயாரித்துள்ளது.

குறித்த விமானத்தின் மின் கலத்திற்கு 30 நிமிடங்கள் மின்னேற்றினால், ஒரு மணி நேரம் விண்ணில் பறக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இஸ்ரேலின் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்துள்ள ஏலிஸ் என்ற இந்த விமானத்தின் இயந்திரம் சியேடெல் நகருக்கு வடக்கில் அமைந்துள்ள ஆர்லிங்டன் விமானத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் முதல் பயணிகள் விமானம் விண்ணில் பறக்க தயாராகி வருகிறது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பது பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த விமானம், மணிக்கு சுமார் 440 கடல் மைல்கள் தூரம் வரை பயணிக்கக் கூடியது.

விமானத்தின் அதிகப்படியான வேகம் மணிக்கு 287 மைல்கள். இரண்டு விமானிகள், 9 பயணிகள் மற்றும் 850 இறாத்தல் பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும். பயணிகள் வசதியாக அமர்ந்து செல்லக் கூடிய வகையிலும் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts