பிந்திய செய்திகள்

சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது

சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளதாக சீனாவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புகழாரம் சூட்டியுள்ளார்.
சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு தாமரை தடாக அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது அவர் இதனைத் கூறினார்.

சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை என்றும், தமது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவும் இல்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறதாக தெரிவித்த மகிந்த, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது தமது எதிர்பார்ப்பும், பொறுப்புமாகும் எனவும் மேலும் தெரிவித்தார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்கவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts