இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில் ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது.
இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான செயல் அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கோபத்தில் இருக்கும் மக்களிடம் சுமூகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
அதேசமயம் எதிர்க்கட்சிகள் மக்களிடம் போராட்டத்தை தூண்டிவிட செய்யக்கூடாது எனவும், அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா.சபை அறிவுறுத்தியுள்ளது.













































