டசன் கணக்கான சால்மோனெல்லா பாக்டீரியா வழக்குகளுடன் பெல்ஜியத்தில் உள்ள ஒரு கிண்டர் சாக்லேட் தொழிற்சாலை தொடர்புடையதை அடுத்து இத் தொழிற்சாலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தின் உணவுப் பாதுகாப்பு ஆணையம், ஃபெரெரோக்குச் சொந்தமான ஆர்லோனில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அனைத்து கிண்டர் தயாரிப்புகளையும் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.
கிண்டர் சாக்லேட்டுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய சால்மோனெல்லா பாக்டீரியா வழக்குகள் பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பதிவாகியுள்ளன.
ஃபெரெரோ மன்னிப்பு கோரியதும், உடனடியாக தோல்விகளை ஒப்புக்கொண்டுள்ளது. பெல்ஜியத்தின் உணவுப் பாதுகாப்பு ஆணையமான AFSCA, ஃபெரெரோ தனது விசாரணைக்கு முழுமையான தகவலை வழங்க முடியாததால் தொழிற்சாலையை மூட உத்தரவிட்டது.
AFSCA விசாரணை நடந்து வருவதாகவும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு தேவையான உத்தரவாதங்களை ஃபெரெரோ வழங்கினால் மட்டுமே தொழிற்சாலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறியது.
இத்தகைய முடிவை ஒருபோதும் இலகுவாக எடுக்க முடியாது, ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் அதை அவசியமாக்குகின்றன. நமது குடிமக்களின் உணவுப் பாதுகாப்பை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது, என பெல்ஜிய விவசாய அமைச்சர் டேவிட் கிளாரின்வால்(David Clarin) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.