Home உலகம் உலகம் முழுவதும் வன்முறை, உள்ளிட்ட காரணிகளால் சுமார் 100<br>மில்லியனுக்கு மேல் அகதிகளாக…..

உலகம் முழுவதும் வன்முறை, உள்ளிட்ட காரணிகளால் சுமார் 100
மில்லியனுக்கு மேல் அகதிகளாக…..

0
உலகம் முழுவதும் வன்முறை, உள்ளிட்ட காரணிகளால் சுமார் 100<br>மில்லியனுக்கு மேல் அகதிகளாக…..

உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்கள் மோதல்கள், வன்முறை, உள்ளிட்ட காரணிகளால் சுமார் 100 மில்லியனுக்கு அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரகம் (UNHCR) தெரிவித்துள்ளது.

100 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது மிகப் பெரிய நெருக்கடியாகும். இந்நிலையில் இடப்பெயர்வுகளுக்குக் காரணமான மோதல்களுக்குத் தீா்வு காணவும், துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு காரணமான பிரச்னைகளைத் தீா்க்கவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எத்தியோப்பியா, புா்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், கொங்கோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் புதிய வன்முறை அல்லது மோதல்களால் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து, உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயா்ந்தோா் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு இறுதியில் 90 மில்லியனாக இருந்தது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் தொடங்கியதிலிருந்து 60 இலட்சம் போ் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனா். 80 இலட்சம் போ் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் அகதிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்துள்ளது.

100 மில்லியன் அகதிகள் என்பது உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாகும். அகதிகள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையே தீர்வாகும் என அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here