பிந்திய செய்திகள்

டொங்கா தீவுக்கு அருகில் மீண்டும் பாரிய அதிர்வு!

டொங்கா தீவுக்கு அருகில் ஜீ.எம்.டி நேரப்படி இன்று காலை 6.40 மணி அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.5 கிலோ மீற்றர் பூமிக்கு அடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பசுபிக் பெருங்கடலில், அண்மையில் எரிமலை வெடித்து சிதறியதில் கடும் பாதிப்புக்கு உள்ளான டொங்கா தீவுக்கு அருகில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் ரிச்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. டொங்காவின் பெங்கய் என்ற இடத்தில் இருந்து வடமேற்கு திசையில் 136.1 கடல் மைல் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தை டொங்கா வாசிகள் கடுமையாக உணர்ந்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி டொங்கா தீவுக்கு அருகில் பசுபிக் பெருங்கடலில் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

இதனால், சுனாமி ஏற்பட்டதுடன் தீவுக்கு பெரும் அழிவும் ஏற்பட்டது. டொங்கா தீவுக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் நாடுகளை தாக்கும் அளவுக்கு சுனாமி ஏற்பட்டது.

இந்த சுனாமி காரணமாக டொங்கா நாட்டுக்கு இணைய வசதிகளை வழங்கும் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட இணைப்புகள் அழிவடைந்ததுடன் அது தற்போது வரை மறுசீரமைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையால் டொங்கா தீவு ஏனைய உலக நாடுகளில் இருந்து தன்மைப்பட்டுள்ளதுடன் வெளி உலகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, ஜப்பான் மீது மேற்கொண்ட அணு குண்டு தாக்குதலை விட இந்த எரிமலை வெடிப்பின் தாக்கம் அதினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts