பிந்திய செய்திகள்

தாய் மற்றும் சகோதரர்கள் என்று பாராமல் 14வயது சிறுவன் செய்த செயல்…!

பாகிஸ்தானின் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் PUBG விளையாடியதை தட்டிக்கேட்ட தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை 14வயது சிறுவன், சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வருகிறான். சிறுவனின் தாயார் 45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக், இவர் விவாகரத்து பெற்றவர்.

இந்த நிலையில், தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் கடந்த வாரம் நஹித் முபாரக், அவரது மகன் தைமூர் மற்றும் இரு மகள்களுடன் இறந்து கிடந்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணை மேற்கொண்டதில் அவரது மகன்தான் கொலையாளி என தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில், PUBG விளையாடியதைத் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts