பிந்திய செய்திகள்

தூண்டிலால் சாதனை படைத்த இளைஞன்!!!

சுவீடன் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் இவர் தூண்டிலை போட்டு அதிர்ஷ்டத்தை பிடித்திருக்கிறார். அதுவும் கின்னஸ் சாதனையை பதிவு செய்யும் அளவிற்கு பிரமாண்டமான அதிர்ஷ்டம். ஜோயல், விடுமுறை நாட்களில் தூண்டிலில் மீன் பிடிக்க ரொம்பவும் ஆசைப்படுவாராம்.

அப்படி ஒரு நாள் மீனிற்காக தூண்டிலை வீச… அதில் 565 கிலோ எடையுள்ள அதிர்ஷ்டம் சிக்கி உள்ளது. ஆமாங்க…! ஜோயலுக்கு சிக்கியது, 565 கிலோ எடையுள்ள சுறா மீன். மனிதர் தூண்டிலிலே இவ்வளவு பெரிய மீனை பிடித்து கின்னஸ் சாதனையை பதிந்துவிட்டார்.

‘‘சின்ன மீன் பிடித்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் கடலுக்குள் சென்றேன். ஆனால் இவ்வளவு பெரிய மீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்காக கின்னஸ் சான்றிதழும் கொடுத்தார்கள்.

அதெல்லாம் சரி… இவ்வளவு பெரிய மீனை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தான் தெரியவில்லை’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரமாண்ட மீனை தூண்டில் போட்டு பிடித்தது மட்டுமில்லாமல், தூண்டில் அறுந்துவிடாமல் சுறா மீனை லாவகமாக கரைக்கும் கொண்டு வந்திருக்கிறார். உண்மையிலேயே சாதனை மனிதர் தான்.
மூலக்கதை

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts