Hannah Mossman Moore என்ற 29 வயதான பிரித்தானியாவை சேர்ந்த இளம்பெண்ணொருவர் 4 ஆண்டுகளாக கோடீஸ்வரர் ஒருவரால் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் அந்த தாக்கம் அவரை பெரிய கற்கள் வைத்த மோதிரங்களை செய்யும் நகை வடிவமைப்பாளராக மாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் விலைமதிப்பற்ற ரத்தின கற்களை கொண்டு உயர்ந்த நெறிமுறைகளை செயல்படுத்தி தனித்துவமான மோதிரங்களை உருவாக்குகிறார்.
இதை Jean London என்ற பிராண்டுக்கு கீழே £300ல் இருந்து விற்பனை செய்கிறார். அடிலீ, ரிஹானா போன்ற பல பிரபலங்களும் இந்த மோதிரங்களை வாங்கியுள்ளனர். இது போன்ற பெரிய கற்களை வைத்து உருவாக்கப்படும் பெண்களுக்கான ஆபரணங்களை ஒரு கவசமாக இந்த பிராண்ட் மூலம் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
இது போன்ற மோதிரங்களை அணிவதால் அதிக சக்தி வாய்ந்த பெண்ணாக உணர முடிகிறது என்கிறார் Hannah.
ஆம்! அவர் வாழ்வில் நடந்த கசப்பான சில விடயங்களே அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கோடீஸ்வரர் ஒருவர் Hannah-வை நான்கு ஆண்டுகள் பின் தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார், அவருடன் டேட்டிங் செல்ல Hannahவுக்கு விருப்பம் இல்லாத நிலையில் அவரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
அந்த சொந்த கசப்பான அனுபவம் தான் அவரை இது போன்ற பெரிய கற்களை கொண்டு மோதிரங்களை உருவாக்கும் நகை வடிவமைப்பாளராக மாற்றியுள்ளது.
அந்த நபரால் தான் சந்தித்த அதிர்ச்சி அனுபவங்களே இது போன்ற கவசமாக இயங்கும் மோதிரத்தை வடிவமைக்கும் யோசனையை கொடுத்ததாக Hannah கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், என்னுடைய டிசைன்கள் சக்திவாய்ந்த நகைகளுக்கு மாறியது, அதை நீங்கள் கவசமாக அணியலாம். இதை அணியும் போது சக்தி வாய்ந்தவளாக உணர்கிறேன்.
விலையுயர்ந்த கற்கள் அனைத்தும் நெறிமுறை ரீதியாக பெறப்பட்டவை. இலங்கையில் நான் வசித்த போது பெண்களால் நடத்தப்படும் சுரங்கங்களை நடத்தும் உள்ளூர் சுரங்க உரிமையாளரால் பல புதிய விடயங்களை கற்றேன்.
அங்கு தொழிலாளர்கள் தாங்கள் வெட்டிய கற்களின் பங்குகளை வைத்திருப்பார்கள் என கூறியுள்ளார். இந்த வணிகத்தில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர், ஆனால் இதை நான் மாற்ற விரும்புகிறேன்.
ஏனெனில் பல நிறுவனங்கள் தங்களுடைய ரத்தினக் கற்கள் எங்கிருந்து வருகின்றன அல்லது தங்களுடைய நகைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என கூறியுள்ளார்.