பிந்திய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் நடந்த கொடூர சுறா தாக்குதல்..!

கடந்த 60 வருடங்களில் சிட்னியில் சுறாவின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் சுறாவால் தாக்கப்பட்டுஉயிரிழந்த நபர் தனது இறுதிநிமிடங்களில் உதவிக்காக கதறினார். 14 அடி வெள்ளை சுறாவை எதிர்த்து போராட முடியாத நிலையில் காணப்பட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

லிட்டில் பே கடற்கரை அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நேற்று கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவரை பெரிய சுறா தாக்கியது.

Gallery

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, சிட்னி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், சுறா தாக்குதல் நடந்த பகுதியை சுற்றி எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.

நியூ சவுத் வேல்ஸ் முதன்மைத் தொழில்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

சுறா உயிரியலாளர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டது 9.8 அடி நீளமுள்ள வெள்ளை சுறாவாக இருக்கலாம்.

1963-க்குப் பிறகு சிட்னியில் நடந்த முதல் கொடிய சுறா தாக்குதல் இதுவாகும். கோடையில் மக்கள் கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். ட்ரோன் மூலம் சுறா மீன்கள் இருப்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என அவர் கூறினார்.

Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts