பிந்திய செய்திகள்

ஏவுகணைகளை சோதனை -பதற்றத்தை அதிகரித்த ரஷ்யா!

ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளையும் ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியது.

ரஷ்யா இன்று நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அனைத்து ஏவுகணைகளும் அவற்றின் இலக்குகளைத் தாக்கி, அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷ்யா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts