பிந்திய செய்திகள்

போருக்கு மத்தியில் பிறந்த பெண் குழந்தை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது உச்சகட்ட போர் நிலவி வருகிறது.இந்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மெட்ரோ சுரங்கத்தில் பதுங்கியிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்த ரஷ்யப் படைகள், ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்தன. குண்டுவெடிப்புகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள மக்கள் சுரங்கப் பாதைகளிலும் பதுங்கு குழிகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில், கீவ் நகரில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதையில் பதுங்கியிருந்த 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த உக்ரைன் பொலிஸார், அந்த பெண்ணுக்கு உதவியுள்ளனர்.

சுரங்கத்தில் பெண் குழந்தை பிறந்து, ஆம்புலன்ஸ் மூலம் மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts