பிரபல குத்துச்சண்டை வீரர் world heavyweight champion ஒலெக்சாண்டர் உசிக் (Oleksandr Usyk ) ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதமேந்தப்போவதாக தனது நாட்டிற்கு திரும்பியுள்ளார்
.
எனினும் நான் யாரையும் கொல்லவிரும்பவில்லை என தெரிவித்த (Oleksandr Usyk ) , ஆனால் என்னையும் எனது குடும்பத்தினையும் பாதுகாப்பதற்காக எதனையும் செய்வேன் என கூறினார்.
போர் தொடர்பில் நீங்கள் அச்சமடைந்திருக்கின்றீர்களா என்ற சிஎன்என்னின் கேள்விக்கு பதிலளித்த அவர் (Oleksandr Usyk ) , எனது ஆத்மா இறைவனிற்கு சொந்தமானது, எனது உடலும் எனது கௌரவமும் எனது தேசத்திற்கு சொந்தமானவை,ஆகவே அச்சம் என்பது இல்லை இல்லவேயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
world heavyweight champion ஒலெக்சாண்டர் உசிக் (Oleksandr Usyk ) கடந்த வருடம் செப்டம்பரில் உலக குத்துச்சண்டை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை வேறு சிலர் உக்ரைன் குத்துச்சண்டை வீரர்களும் ஆயுதமேந்தியுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
முன்னாள் சம்பியனும் தலைநகரின் மேயருமான விட்டலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தங்கள் நாட்டைபாதுகாப்பதற்காக உக்ரைன் மக்கள் ஆயுதமேந்துவது குறித்து பெருமையடைவதாக சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளளார்.
அத்துடன் இனிமேல் நடக்கவுள்ள மோதலை நாட்டின் எதிர்காலத்திற்கானது என கருதுவதாக குறிப்பிட்டுள்ள அதேவேளை , அவரது சகோதரர் விளாடிமிரும் (Wladimir) ஆயுதமேந்தியுள்ளார்.
மேலும் உக்ரைனின் இன்னுமொரு குத்துச்சண்டை வீரரான வாசிலி லோமச்சென்கோவும் (Vasiliy Lomachenko) இராணுவத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது ,