பிந்திய செய்திகள்

ரஷ்யா- உக்ரைன் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்

ரஷ்யா- உக்ரைன் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பெலாரஸ் நாட்டில் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்யா சில இடங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தது. புடினுடன் நேரடியாக பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் ரஷ்யா- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதற்கான ஏற்பாட்டை துருக்கி செய்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்- உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியில் உள்ள அண்டாலியா நகரில் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். இதற்காக இருவரும் அந்த நகருக்கு வந்துவிட்டனர்.

துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மேவுலுட் கவ்சோக்லு இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் இடையே மத்தியம்சம் செய்வதில் துருக்கி முன் வந்தது. இருதரப்பினர் இடையே வலுவான உறவை பெறுவதில் அந்தநாடு ஆர்வமாக உள்ளது.

ரஷ்யா- உக்ரைன் அமைச்சர்கள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் உடன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts