பிந்திய செய்திகள்

ரஷ்யப்படை உக்ரைன் மகப்பேறு வைத்தியசாலை மீது தாக்குதல்!

ரஷ்யப்படை உக்ரைன் மரியுபோலில்அமைந்துள்ள மகப்பேறு வைத்தியசாலை மீது தாக்குல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதலில் கர்ப்பிணியும் அவரது குழந்தையும் பலியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள், இந்த பெண் சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்படுவதை காண்பித்தது.

இந்தநிலையில் அவருக்கு குழந்தை சனிக்கிழமை அவசர பிரிவில் பிறந்தது. எனினும் பின்னர் இருவரும் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

இதேவேளை உக்ரைன் அதிகாரிகளின் தகவலை மறுத்துள்ள ரஷ்ய அதிகாரிகள், மகப்பேறு வைத்தியசாலையினை உக்ரைன் தீவிரவாதிகள் ஒரு தளமாகப் பயன்படுத்துவதற்காகக் கையகப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் அது வைத்தியசாலையாக இயங்கவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் உக்ரைனிய அதிகாரிகள் இந்த கூற்றுக்களை கடுமையாக மறுத்துள்ளனர். அத்துடன் ரஷ்யா போர்க்குற்றம் புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts