பிந்திய செய்திகள்

தாயாருக்காக மருந்து வாங்கச் சென்ற உக்ரைன் பெண்மணி உட்பட மூவர் மரணம்

ரஷ்ய டாங்கியால் மருந்து வாங்கச் சென்ற உக்ரைன் பெண்மணி உட்பட மூவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில், அவரது தாயாரும் சாரதியும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கீவ் அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்த பின்னர், போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை முன்னெடுத்து வந்துள்ளார் Valeriia Maksetska. இந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட தமது தாயாருக்கு மருந்துகள் தேவைப்பட, கார் ஒன்றில் இவர்கள் இருவரும் சாரதியும் என மூவரும் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே, ரஷ்ய டாங்கிகள் நகருக்குள் நுழைந்து, அணிவகுத்து செல்வதை இவர்கள் காண நேர்ந்துள்ளது. ரஷ்ய துருப்புகளின் அணிவகுப்பு கடந்து செல்லும் வரையில் இவர்கள் மூவரும் காருக்குள் பொறுமையாக காத்திருந்துள்ளனர்.

இருப்பினும், ரஷ்ய வீரர் இவர்கள் மீது டாங்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந் நிலையிலேயே Valeriia Maksetska உட்பட மூவரும் ஒரே நொடியில் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

இதேவேளை, Donetsk பகுதியில் ரஷ்ய குண்டுவீச்சில் நூலிழையில் உயிர் தப்பிய Valeriia Maksetska கீவ் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார் எனவும், ஆனால் தற்போது கீவ் நகரில் வைத்து ரஷ்ய துருப்புகளிடம் சிக்கியுள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய துருப்புகளின் இந்த கொடூர நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts