பிந்திய செய்திகள்

உக்ரைன் ரஷ்யா தாக்குதலால் சுமிகிம்ப்ரோம் இரசாயன ஆலையிலிருந்து கசியும் அமோனியம் வாயு

இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் காணொளி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 80 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களை உக்ரைன் காப்பாற்றியதாக நினைவு கூர்ந்தார்.

ஆகவே தற்போது இஸ்ரேல் நடுநிலைமையை கைவிட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யாவிற்கு, சீனா ஆயுத உதவி வழங்கவில்லை என்று அமெரிக்காவிற்கான சீன தூதர் கிங் ஆங் தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்காலத்தில் பெய்ஜிங், மாஸ்கோவிற்கு ஆயுத உதவி அளிக்கும் வாய்ப்புகளை அவர் திட்டவட்டமாக நிராகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமி நகரில் உள்ள சுமிகிம்ப்ரோம் ரசாயன ஆலையில் இருந்து அமோனியம் வாயு கசிவதாக அந்நகர கவர்னர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts