பிந்திய செய்திகள்

133 பேரை ஏற்றிச் சென்ற சென்ற சைனா ஈஸ்டர்ன் விமானம் விபத்து

இன்று (திங்கட்கிழமை) குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு 133 பேரை ஏற்றிச் சென்ற சென்ற சைனா ஈஸ்டர்ன் விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை என்றும் மாகாண அவசர மேலாண்மை பணியகத்தை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம், தெற்கு சீனாவில் உள்ள மலைப்பகுதியில் குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது என்று சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் ஒஃப் சீனா (சிஏஏசி) தெரிவித்துள்ளது.

வுஜோ நகரின் மீது பறந்துக்கொண்டிருந்த போது, விமானம் தொடர்பை இழந்ததாகவும், விமானத்தில் 123 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முன்னதாக விமானத்தில் 133 பேர் இருந்ததாக அரச ஊடகம் தெரிவித்தது.

மேலும், இந்த விமானம், இறுதியாக, 376 நாட்ஸ் வேகத்தில் 3225 அடி உயரத்தில் மதியம் 2:22 மணிக்கு பறந்ததாக, விமான கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம், மாலை 3:05 மணிக்கு தரையிறங்க இருந்தது.

6 வருட பழமையான 737-800 விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.

சீனாவின் மூன்று முக்கிய விமான நிறுவனங்களில் சைனா ஈஸ்டர்ன் நிறுவனமும் ஒன்றாகும்.

கடந்த தசாப்தத்தில் நாட்டின் விமானத் துறையின் பாதுகாப்புப் பதிவு உலகின் மிகச் சிறந்ததாக உள்ளது.

இரட்டை எஞ்சின், ஒற்றை இடைகழி போயிங் 737 குறுகிய மற்றும் நடுத்தர தூர விமானங்களுக்கான உலகின் மிகவும் பிரபலமான விமானங்களில் ஒன்றாகும்.

ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க்கின் கூற்றுப்படி, சீனாவின் கடைசி அபாயகரமான ஜெட் விபத்து 2010ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

ஹெனான் எயார்லைன்ஸின் எம்ப்ரேயர் இ-190 பிராந்திய ஜெட் விமானம், யிச்சுன் விமான நிலையத்தை நெருங்கும்போது விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 96 பேரில் 44பேர் உயிரிழந்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts