பிந்திய செய்திகள்

‘போர் நிறுத்தப்பட வேண்டும்’ – ரஷ்ய யுவதி கதிர்காமத்தில் வழிபாடு!

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை கந்திர்காம கந்தன் ஆலயத்தில்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என, வழிபாடு செய்த ரஷ்ய யுவதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அங்கு வெகு விரைவில் அமைதிப்பூ மலரவேண்டும் என இறையாசி வேண்டி, கதிர்காமம் புனித பூமியில் தேங்காய் உடைத்து ரஷ்ய நாட்டு யுவதியொருவர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இரு நாட்டு பிரஜைகளினதும் விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டு பிரஜைகள் கடும் கவலையுடன் நாட்களை கழித்துவருவதுடன், தமது உறவுகளுக்கு என்ன நடந்து என்பதை தெரிந்துகொள்ளமுடியாமல் தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என ரஷ்யா நாட்டு யுவதியொருவர் இலங்கையில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமை பல்லரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts